உலகில் ஊழல் மோசடிகளற்ற நாடுகளின் வரிசையில் சுவிட்சர்லாந்து முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நிதி வெளிப்படைத்தன்மையுடைய நாடுகளின் வரிசையில் மேற்குலக நாடுகள் முன்னணி வகிக்கின்றன.
நிதி வெளிப்படைத்தன்மை அல்லது ஊழல் மோசடிகளற்ற நாடுகளின் வரிசையில் முதலிடத்தை டென்மார்க்கும், இரண்டாம் இடத்தை பின்லாந்தும் மூன்றாம் இடத்தை நியூசிலாந்தும் பெற்றுக்கொண்டுள்ளன.
இந்த வரிசையில் சுவிட்சர்லாந்து ஆறாம் இடத்தை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் அமைப்பு ஊழல் மோசடிகள் குறித்த சுட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டு வருகின்றது.
சுமார் 180 நாடுகள் தொடர்பில் கண்காணிக்கப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.