உலக செல்வந்தவர்களில் ஒருவரான எலொன் மஸ்கிற்கு எதிராக பிரேஸில் நீதிபதியொருவர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
டுவிட்டரில் பிழையான தகவல்கள் வெளியிடப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்ஸான்ட்ரே டி மொராயஸ் (Alexandre de Moraes) என்பவரே விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
டுவிட்டர் நிறுவனம் நீதிமன்ற உத்தரவுகளை கண்டு கொள்ளத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவினை மீறியமைக்காக, டுவிட்டர் நிறுவனம் நாள் ஒன்றுக்கு 19770 டொலர்களை அபராதமாக செலுத்த நேரிடும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
சில கணக்குகளை முடக்குமாறு பிரேஸில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை மஸ்க் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.