கனடாவின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என இந்தியா தெரிவித்துள்ளது.
தேர்தலில் வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பில் கனடா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை இந்தியா நிராகரித்துள்ளது.
கடந்த 2019 மற்றும் 2021ம் அண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களின் போது இந்தியாவும், பாகிஸ்தானும் தலையீடு செய்ததாக குற்றம் சமத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்த இரண்டு தேர்தல்களிலும் எவ்வித தலையீடுகளையும் செய்யவில்லை என இந்திய மத்திய அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கனடிய தேர்தல்களில் வெளிநாடுகள் தலையீடு செய்தமை குறித்த விசாரணை அறிக்கையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்தியா இணைய வழியாக கனடிய தேர்தல்களில் தலையீடு செய்ததாக கனடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை குற்றம் சுமத்தியிருந்தது.
வெளிநாடுகளின் ஜனநாயக செயன்முறைகளில் இ;ந்தியா தலையீடு செய்யாது என சுட்டிக்காட்டியுள்ளது.