இஸ்ரேல் -ஹமாஸ் தரப்புக்களுக்கு இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
எகிப்தில் இஸ்ரேலிய மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இஸ்ரேலிய பிரதிநிதிகள் நெகிழ்வுப் போக்குடன் செயற்படுவதில்லை என பலஸ்தீன பிரதிநிதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எவ்வித முன்னேற்றமும் கிடையாது என பலஸ்தீன பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
போர் நிறுத்தம், கைதிகள் பரிமாற்றம், நிவாரணப் பொருள் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.