சுவிட்சர்லாந்தில் சுமார் 19 மில்லியன் கோவிட் தடுப்பூசிகள் அழிக்கப்பட்டுள்ளன.
கோவிட் 19 பெருந்தொற்று ஆரம்பமானது முதல் இதுவரையில் 18.6 மில்லியன் கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகி அழிக்கப்பட்டுள்ளன.
அழிக்கப்பட்ட தடுப்பூசிகள் சுவிட்சர்லாந்து மக்களுக்கு ஏற்றப்பட்ட தடுப்பூசிகளை விடவும் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரையில் சுமார் 8.2 மில்லியன் கோவிட் தடுப்பூசிகள் அழிக்கப்பட்டுள்ளன.
சுவிட்சர்லாந்து மத்திய சுகாதார அலுவலகம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் 17 மில்லியன் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.