சுவிட்சர்லாந்து அரசாங்கம் ஒரு தொகுதி பீரங்கிகளை ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
லியொபெர்ட் ரக யுத்த தாங்கிகளே இவ்வாறு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
ஒன்பது பீரங்கிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பீரங்கிகளை ஏற்றுமதி செய்வதற்கு சுவிட்சர்லாந்து அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.
இந்த தாங்கிகள் உக்ரைனுக்கு மீள் ஏற்றுமதி செய்யப்பட மாட்டாது என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைய இவ்வாறு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு சுவிஸ் ஆயுதங்களை மீள் ஏற்றுமதி செய்யுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனினும், இந்த கோரிக்கைகளை சுவிட்சர்லாந்து அரசாங்கம் தொடர்ந்தும் நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.