சுவிட்சர்லாந்து இராணுவம் நிதி நெருக்கடி நிலைமையை எதிர்நொக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு பிரதான நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆண்டு மற்றும் எதிர்வரும் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகள் போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இரண்டாண்டு காலப் பகுதிக்காக செலவுகளுக்காக ஒரு பில்லியன் சுவிஸ் பிராங்க் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ உள்ளக ஆவணங்களின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.