சுவிட்சர்லாந்து மக்கள் அதிகளவு வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிபப்பு ஒன்றின் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் 55 வீதமான மக்கள் வலி நிவாரணிகளை (painkillers) பயன்படுத்தியுள்ளனர்.
1992ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 12 வீதமாக காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுககின்றது.
சுவிட்சர்லாந்து மத்திய புள்ளிவிபரவியல் திணைக்களம் இது பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளது.
15 வயதுக்கும் மேற்பட்ட வயதினர் பல்வேறு உபாதைகளினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 30 ஆண்டுகளில் வலி நிவாரணிகளை பெற்றுக் கொள்வோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தில் ஆண்களை விடவும் பெண்கள் அதிகளவில் வலி நிவாரணிகளை பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.