சமூக ஊடக பயன்பாட்டினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோரிடம்> மெட்டா நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி மார்க் சக்கர்பேர்க் மன்னிப்பு கோரியுள்ளார்.
இணைய வழியில் சிறுவர்கள் எதிர்நோக்கும் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் அமெரிக்க கொங்கிரஸ் சபையின் விசாரணைகளில் பங்கேற்ற போது அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.
சமூக ஊடகங்களை பயன்படுத்திய போது பாலியல் துஸ்பிரயோகங்கள் மற்றும் ஏனைய துன்புறுத்தல்களினால் உயிரிழந்த பிள்ளைகளின் பெற்றோர் இந்த விசாரணைகளில் பங்கேற்றிருந்தனர்.
உயிரிழந்த தங்களது பி;ள்ளைகளின் புகைப்படங்களை இந்தப் பெற்றோர் விசாரணைகளின் போது ஏந்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களது குடும்பங்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகள் போன்று எவரும் எதிர்நோக்கக் கூடாது என சக்கர்பேர்க் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களின் வாயிலாக சிறுவர்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவதனை தடுத்து நிறுத்த பல்வேறு வழிமுறைகளில் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
2222
Headline: காசா நிலைமை குறித்து ஐ.நா கரிசனை
காசாவின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை கரிசனை வெளியிட்டுள்ளது.
காசா பிராந்தியத்தின் நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து செல்வதாக தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனிதாபிமான இணைப்பாளருடன் இணைந்து செயற்படுமாறு அனைத்து தரப்புக்களிடமும் கோரப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தொடர்ச்சியாக பாரிய குண்டுத் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் இதனால் மனிதாபிமான பணிகளை முன்னெடுக்க முடியவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, காசா பிராந்த்தியத்தில் போர் காரணமாக அரைவாசிக்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக அல்லது பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
144000 முதல் 175000 வீடுகள் முழுமையாக அல்லது பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.