கட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சுவிட்சர்லாந்து நீதி அமைச்சர் பீட் ஜேன்ஸ் தெரிவித்துள்ளார்.
குடியேற்றம் மற்றும் ஏதிலிகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய உடன்படிக்கை வரவேற்கப்பட வேண்டியது என தெரிவித்துள்ளார்.
இந்த புதிய உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவது குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் சுவிஸ் நீதி அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.
இந்த புதிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டால் அதன் மூலம் சுவிட்சர்லாந்து கூடுதலான நலன்களை பெற்றுக்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.
புதிய சட்டத்தினை அமுல்படுத்துவதற்கு சுவிட்சர்லாந்து கூடுதல் அளவிலான ஒத்துழைப்பினை வழங்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏதிலி கோரிக்கைகள் தொடர்பில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளக்கூடிய வகையில் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.