சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் நடவடிக்கைகளை நிராகரிப்பதாக இஸ்ரேலின் ஜனாதிபதி இசாக் ஹேர்சொக் தெரிவித்துள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றினை பயன்படுத்தி இஸ்ரேலுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை நேச நாடுகள் தடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு எதிரான சர்வதேச விசாரணைகள் ஜனநாயகத்திற்கு பேராபத்தினை ஏற்படுத்தும் வகையிலானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாகூ உள்ளிட்ட சிலருக்கு எதிராக பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
எனினும் இந்த பிடிவிராந்து உத்தரவினை நிராகரிப்பதாகவும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பக்கச்சார்பாக செயற்படுவதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் அன்தனி பிலிங்கன் இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.