சுவிட்சர்லாந்தில் உடல் உறுப்புக்கள் தானம் செய்யும் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டில் இவ்வாறு உறுப்பு தானம் செய்யப்பட்ட எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுவிஸ் உறுப்பு நிறுவனத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருந்த 675 பேருக்கு சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அதிக எண்ணிக்கையிலான சுவிட்சர்லாந்து மக்கள், தங்களது இறந்த உறவினர்களின் உடல் உறுப்புக்களை தானம் செய்வதற்கு விரும்புவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.