தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்த மே தின கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று கொட்டகலை பிரதேச சபை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
விசேட விருந்தினராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டபோதே இதனை தெரிவித்தார்.
வீழ்ச்சியடைந்த நாட்டை பொறுப்பேற்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. ஸ்தீரமான பொருளாதாரத்தை கட்டுயெழுப்ப அமைச்சரவை பக்கபலமாக இருந்தது.
அதேபோல் நாடு வீழ்ச்சியடைந்த காலப்பகுதியில் கூடுதலாக பாதிக்கப்பட்ட தோட்டத்தொழிலாளர்கள் நாட்டுக்கு அந்நிய செலாவணியை 2023 ஆம் ஆண்டில் கொண்டுவர காரணமாக அமைந்தார்கள்.
தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினைகளை தாம் ஒருபோதும் மறக்கப்போவதில்லை அவ்வாறு மறந்தாலும் ஜீவன் தொண்டமான் விடப்போவதில்லை என்று இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்.
எனினும், இந்த விடயம் தொடர்பில் பெருந்தோட்டத் தொழிலாளர் சம்மேளனம் இதுவரையில் தங்களது நிலைப்பாட்டை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.