பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சூரிச் விமான நிலைய நிர்வாகம் எதிர்வுகூறியுள்ளது.
கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு வீதத்தினால் உயர்வடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலையத்தின் பணிப்பாளர் லூகாஸ் ப்ரோசி இந்த விடயம் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தவற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாரியளவிலான மாற்றங்களைச் செய்யாது அதிகரித்துச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை சமாளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.