சுவிட்சர்லாந்தில் கஞ்சா வளர்ப்பு மற்றும் விற்பனையை சட்ட ரீதியாக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜெர்மன் மொழி பேசும் சுவிட்சர்லாந்து பிராந்தியத்தில் இந்தக் கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
கஞ்சா வளர்ப்பின் மூலம் பொருளாதார வாய்ப்புக்கள் உருவாகும் என மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.
18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தங்களது தேவைக்காக கஞ்சா வளர்ப்பதற்கும் வைத்திருப்பதற்கும் அனுமதி அளிக்கும் வகையில் அரசியல் அமைப்பில் சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
இந்த சட்டத் திருத்தத்தை கோரி ஒரு லட்சம் கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளன.
எதிர்வரும் 2025ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 30ம் திகதிக்குள் கையொப்பங்கள் திரட்டப்பட்டு, பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்துமாறு கோரப்பட உள்ளது.
சுவிட்சர்லாந்தின் பேசல், சூரிச், ஜெனீவா, பேர்ன் மற்றும் லாவுசர்ன் போன்ற கான்டன்களில் ஏற்கனவே கஞ்சா விற்பனை குறித்த பரீட்சார்த்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.