சுவிட்சர்லாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் புதிய விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் 16ம் திகதி முதல் இந்த புதிய விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது.
சூரிச்சிலிருந்து டெல்லிக்கு இந்த விமான சேவை முன்னெடுக்கப்பட உள்ளது.
எயார் இந்தியா விமான சேவை நிறுவனம் இந்த புதிய விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
இந்த புதிய விமான சேவை மூலம் பயணிகள் இந்தியாவிற்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையில் தொடர்புகளை பேணுவதற்கு வழியமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் முதல் விமானப் பயணங்களுக்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் அதனை தாண்டிய இடங்களுக்கும் சுவிட்சர்லாந்திலிருந்து பயணங்களை மேற்கொள்ள இந்த புதிய விமான சேவை உதவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சகல வசதிகளுடன் கூடிய அதி நவீன விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக எயார் இந்தியா விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.