சுவிட்சர்லாந்தில் பிரெஞ்சு மொழி பயன்பாடு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு மொழிகள் பேசப்படும் கான்டன்களில் இவ்வாறு பிரெஞ்சு மொழிபேசுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சுவிட்சர்லாந்து மத்திய புள்ளிவிபரவியல் திணைக்களம் இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
நாட்டில் பிரெஞ்சு, ஜேர்மன் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரதானமாக ஜெர்மனிய மொழி பேசப்பட்டாலும் தற்பொழுது பிரெஞ்சு மொழி பேசுவோரின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதனை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜெர்மன் மொழி பேசப்படும் கான்டன்களில் பிரெஞ்சு மொழி பேசும் பிரஜைகள் அதிகளவில் குடிப்பெயர்வதனால் இவ்வாறு எண்ணிக்கையில் மாற்றம் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.