ரஸ்ய படையினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
உக்ரைனுக்கு எதிரான போரின் போது ரஸ்யா இவ்வாறு இரசாயன ஆயுதப் பயன்பாட்டை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
வெள்ளைப் பொஸ்பரஸ் எனப்படும் ஆபத்தான இரசாயன வகையை ரஸ்ய படையினர் தாக்குதல்களின் போது பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளது.
அடிக்கடி ரஸ்ய படையினர் மீது இவ்வாறு இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் இது தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இரசயான ஆயுதப் பயன்பாட்டுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் ரஸ்யா மீது அமெரிக்கா மேலும் பல்வேறு தடைகளை அறிவித்துள்ளது.
இதேவேளை, இவ்வாறான எந்தவொரு இரசாயன ஆயுதங்களும் பயன்படுத்தப்படவில்லை என ரஸ்யா தெரிவித்துள்ளது.