இலங்கை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஈ வீசா வழங்கும் பணிகளை இந்திய நிறுவனமொன்று பொறுப்பேற்றுள்ளது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை குடிவரவு குடியகழ்வு திணைக்களம் ஈவீசா வழங்கும் நடவடிக்கையை சீரான முறையில் முன்னெடுத்து வந்த நிலையில், இந்திய நிறுவனத்திடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த இந்திய நிறுவனம் 25 டொலர்களை மேலதிகமாக அறவீடு செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் அனுமதியின்றி, ஈ வீசா வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வழமையாக ஈ வீசா வழங்குவதற்கான அறவீடு செய்யப்படும் 75 டொலர் கட்டணத்திற்கு மேலதிகமாக இந்த இந்திய நிறுவனம் 25 டொலர்களை மேலதிகமாக அறவீடு செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்திய நிறுவனம் உரிய முறையில் கிரமமாக ஈ வீசா வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளத் தவறியதனால் மீண்டும் வீசா வழங்கும் நடவடிக்கையை குடிவரவு குடியகழ்வு திணைக்களம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்திய நிறுவனம் வீசா வழங்கும் நடவடிக்கையை உரிய முறையில் மேற்கொள்ளவில்லை என இலங்கையர் ஒருவர் விமான நிலையத்தில் விமர்சனம் செய்யும் கணொளியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் இந்திய நிறுவனத்திற்கு இவ்வாறு சந்தர்ப்பம் வழங்கியமை குறித்து குறித்த இலங்கையர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.