இலங்கை விமான நிலையத்தில் வீசா வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வீசா வழங்கும் நடவடிக்கையை இந்திய நிறுவனம் மேற்கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பிலான காணொளியொன்றும் வெளியிடப்பட்டிருந்தது.
குறிப்பாக ஒன் அரைவல் வீசா வழங்கும் பணிகள் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வீசா வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்ட நிறுவனம் இந்தியாவை தலைமையமாக கொண்டதோ, இந்திய நிறுவனமோ அல்லது இந்தியாவில் இயங்கி வரும் நிறுவனமோ கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.