உலகின் மிகவும் பாதுகாப்பான விமான சேவை நிறுவனம் பற்றிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
எயார்லைன் ரேடிங் (AirlineRatings.com)என்ற இணைய தளம் இந்த தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
உலகில் இயங்கி வரும் சுமார் 385 விமான சேவைகளை ஆய்வுக்கு உட்படுத்தி இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் விமான சேவை நிறுவனமான குவான்டாஸ் விமான சேவை நிறுவனம் இந்த பட்டியலில் முதல் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளது.
மிகவும் பாதுகாப்பான விமான சேவை நிறுவனமாக குவான்டாஸ் (Qantas) தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டார் எயார்வெயிஸ் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளது.
எயார் நியூசிலாண்ட் விமான சேவை நிறுவனம் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளது.
சிங்கப்பூர் விமான சேவை நிறுவனம் நான்காம் இடத்தையும் எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனங்கள் ஐந்தாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.
ஈவா எயார், எதிஹார்ட், அலஷ்கா எயார்லைன்ஸ், கெதே பசுபிக் எயார்வெயிஸ் மற்றும் பிரிட்டிஸ் எயார்வெயிஸ் ஆகிய விமான சேவை நிறுவனங்கள் முதல் பத்து இடங்களில் உள்ளவாங்கப்பட்டுள்ளன.
கோவிட் பாதுகாப்பு விதி முறைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்திற் கொண்டு இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.