கனடாவில் ஏதிலிகளை வேகமாக நாடு கடத்துவதற்கு புதிய சட்டத் திருத்தம் அறிமுகம செய்யப்பட உள்ளது.
ஏதிலி கோரிக்கை விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதனை துரிதப்படுத்தும் அதேவேளை, நிராகரிக்கப்படும் ஏதிலிகளை விரைவில் நாடு கடத்தவும் லிபரல் அரசாங்கம் யோசனை முன்மொழிந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திலும் ஏதிலி கோரிக்கை விண்ணப்பங்களை துரிதப்படுத்துவது குறித்து பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
கனடாவில் மாணவர் வீசாவில் தங்கி கற்கும் வெளிநாட்டு மாணவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் ஏதிலி அந்தஸ்து கோருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஏதிலி அந்தஸ்துக்காக விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 1500 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
வீசா காலம் முடிவந்த மாணவர்கள் இவ்வாறு ஏதிலி அந்தஸ்து கோருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில், கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரையில் 46736 பேர் ஏதிலி அந்தஸ்து கோரியுள்ளனர்.
186000 ஏதிலி அந்தஸ்து விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படாத நிலையில் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.