டுபாய்க்கான புதிய விமான சேவையொன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக மத்திய கிழக்கின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான flydubai நிறுவனம் அறிவித்தள்ளது.
சுவிட்சர்லாந்தின் பேசல் முல்ஹவுஸ் விமான நிலையத்திற்கும் டுபாய்க்கும் இடையில் இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி முதல் இந்த விமான சேவை முன்னெடுக்கப்பட உள்ளது.
வாரத்தின் திங்கள், புதன், வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்களில் அதாவது வாரத்தில் நான்கு நாட்கள் சுவிட்சர்லாந்திற்கும் டுபாய்க்கும் இடையில் விமான சேவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு flydubai விமான சேவை நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கு, தென் மற்றும் மத்திய ஆசிய நாடுகள், வட அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு flydubai விமான சேவை நிறுவனம் சேவைகளை முன்னெடுத்து வருகின்றது.
அதிநவீன பயணிகள் விமானங்களில் ஒன்றான போயிங் 737 மெக்ஸ்8 விமானம் சுவிட்சர்லாந்திற்கான விமான சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
156 சாதாரண கட்டண இருக்கைகளும், 10 வியாபார தரத்திலான இருக்கைகளும் இந்த விமானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.