சுவிட்சர்லாந்தில் கடந்த ஈஸ்டர் தினமன்று குண்டுத் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த இரண்டு பதின்மய வயதுடைய சிறுவர்கள் நிப்நதனை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சபாவுசன் கான்டனில் வைத்து குறித்த இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலியைச் சேர்ந்த 15 மற்றும் 16 வயதான சிறுவர்களே இவ்வாறு குண்டுத் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.
இந்த சிறுவர்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு பேணியாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 18 வயதான சுவிட்சர்லாந்து பிரஜை ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.