சுவிட்சர்லாந்தில் நிதிச் சலவை சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டில் 11876 சந்தேகத்திற்கு இடமான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி நாளொன்றுக்கு 47 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
2022ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2023ம் ஆண்டில் நிதிச் சலவையுடன் தொடர்புடைய சம்பவங்களின் எண்ணிக்கை 56 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
சுவிட்சர்லாந்து நிதிச் சலவை குறித்து அறிவிக்கும் நிறுவனத்தினால் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
எதிர்பார்க்கப்பட்டதனை விடவும் கடந்த ஆண்டில் இவ்வாறான சம்பவங்களில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.