சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டு முதலீடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2022ம் ஆண்டை விடவும் கடந்த 2023ம் ஆண்டில் இவ்வாறு முதலீடுகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பா முழுவதிலும் வெளிநாட்டு முதலீட்டு திட்டங்கள் 4 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
எனினும், சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டு முதலீட்டு திட்டங்கள் 50 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
வெளிநாட்டு முதலீடுகள் காரணமாக உள்நாட்டில் வேலை வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன.
2022ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது கடந்த ஆண்டில் வேலை வாய்ப்புக்கள் ஐந்து மடங்காக உயர்வடைந்துள்ளன.
ஐரோப்பிய சந்தையில் சுவிட்சர்லாந்து வியாபார நடவடிக்கைகளுக்கு மிகவும் கவர்ச்சிகரமான நாடாக திகழ்கின்றது என EY என்ற வியாபார ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.