சுமார் இரண்டாயிரம் பலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு வெளியிட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த புதன்கிழமை பலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள், 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் 200 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நியூ ஹெம்செயாரில் 90 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்து மீறல்கள், கடைஉடைப்பு, ஜன்னல் உடைப்பு போன்ற காரணிகளினால் வகுப்புக்களை இடைநிறுத்த நேரிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.