இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படும் சாத்தியங்கள் குறித்து அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றது.
எனினும், தற்போதைக்கு நாடாளுமன்றம் கலைக்கப்படாது என அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஜூன் மாதம் 2ம் வாரம் வரையில் நாடாளுமன்றம் கலைக்கும் சாத்தியங்கள் கிடையாது என ஆளும் கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதிய மின்சாரக் கட்டண சட்ட மூலம் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் நிறைவேற்றப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே அதற்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் சாத்தியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னரும் ஜனாதிபதி தேர்தல் முதலில் நடைபெறும் எனவும், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் சாத்தியங்கள் குறைவு என அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.