ஊடக சுதந்திர தர வரிசையில் சுவிட்சர்லாந்து முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பினால் இது குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
உலகில் ஊடக சுதந்திரம் பேணிப் பாதுகாக்கப்படும் நாடுகளின் வரிசையில் சுவிட்சர்லாந்து 9ம் இடத்தை வகிக்கின்றது.
கடந்த ஆண்டு தர வரிசையில் சுவிட்சர்லாந்து 12ம் இடத்தை வகித்து வந்தது.
எவ்வாறெனினும் ஊடக சுதந்திரம் குறித்த புள்ளிகள் அடிப்படையில் கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு புள்ளிகள் குறைவடைந்துள்ளது.
கடந்த ஆண்டில் 84.4 புள்ளிகளுடன் காணப்பட்ட நிலையில் இந்த ஆண்டில் 84.1 புள்ளிகள் என வீழ்ச்சியடைந்துள்ளது.