சுவிட்சர்லாந்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் மத்திய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
மூன்றில் ஒருவர் இவ்வாறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வார்த்தை ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இனம், மொழி, மதம், பால்நிலை மற்றும் பூர்வீகம் என்பனவற்றின் அடிப்படையில் மக்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சமூகக் காரணிகளின் அடிப்படையிலும் சிலர் துன்புறுத்தல்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான துன்புறுத்தல்களுக்கு இலக்காகும் சிலரின் உடல் நிலை பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.