சுவிட்சர்லாந்தில் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக கைக்கடிகார ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2023ம் ஆண்டில் கைக்கடிகார ஏற்றுமதி மூலம் 26 பில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
சர்வதேச பொருளாதார நெருக்கடி நிலைமைகள், பணவீக்கம் உள்ளிட்ட ஏதுக்களினால் கைக்கடிகார ஏற்றுமதிக்கு பாதிப்புக்கள் ஏற்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் அதிகளவான கைக்கடிகாரங்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
சுமார் 4.1 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் அளவில் கைக்கடிகாரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மேலும் அடுத்தபடியாக சீனாவிற்கு அதிகளவான கைக்கடிகாரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.