சுவிட்சர்லாந்தில் பாரியளவிலான சூரிய சக்தி திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மொர்கெட்டன் மலைத் தொடரில் இந்த சூரிய சக்தி திட்டம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திட்டத்தின் மூலம் மூவாயிரம் வீடுகளுக்கு மின்சார வசதியை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த பாரிய சூரிய சக்தி திட்டத்தை உருவாக்குவதற்கு புருடிஜென் நைடர்ஸ்மென்டல் மாவட்ட ஆளுனர் அலுவலகம் உதவி வழங்கியுள்ளது.
தீவிர ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் இந்த மின்சக்தி நிலையம் உருவாக்கப்பட உள்ளது.
இந்த திட்டம் முன்னெடுக்கப்படக் கூடாத என சில சுற்றாடல் பாதுகாப்பு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.
எனினும் இந்த எதிர்ப்புக்களை மீறி திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.