சுவிட்சர்லாந்தில் விமானங்கள் சில சவால்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமானங்கள் விமான நிலையங்களில் தரையிறக்கப்படும் போதும், புறப்படும் போதும் இந்த சவால்கள் எதிர்நோக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜீ.பீ.எஸ் சமிக்ஞைகளில் ஏற்பட்ட கோளாறுகளினால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சில சந்தர்ப்பங்களில் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதக்கூடிய அபாயங்களும் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டில் சுமார் 10000 இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
2022ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது கடந்த ஆண்டில் ஜீ.பீ.எஸ் செயலிழப்பு பதிவுகள் 55 வீதத்தினால் அதிகரித்துள்ளன.
நாள்தோறும் இவ்வாறான தொழில்நுட்ப கோளாறு பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் இது சில சந்தர்ப்பங்களில் ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.