ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைக்கு இத்தாலி உதவும் என சுவிட்சர்லாந்து ஜனாதிபதி வயோலா ஹம்ஹார்ட் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக சுவிட்சர்லாந்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை.
சுவிஸ் ஜனாதிபதி, இத்தாலிய பிரதமர் ஜோர்ஜியா மெலோனியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
சுவிட்சர்லாந்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்கு இத்தாலி விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
வர்த்தகம், கல்வி மற்றும் ஆய்வுத் துறைகளில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயற்படத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.