இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் இரண்டு லட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், கடந்த ஏப்ரல் மாத சுற்றுலாப் பயணிகளின் மொத்த வருகை எண்ணிக்கை 148867 ஆக பதிவாகியுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது அதிகரிப்பு பதிவாகியுள்ள போதிலும், கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு 209181 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நாட்டின் மாதாந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை சரசாரியாக இரண்டு லட்சமாக காணப்பட்டது.
வழமையாக ஏப்ரல் மாதம் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் சிறு வீழ்ச்சி பாதிவாகும் என்ற போதிலும் இந்த ஆண்டில் பல்வேறு காரணிகளினால் இந்த எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.