அவுஸ்திரேலியாவின் குவான்டாஸ் விமான சேவை நிறுவனம் பயணிகளுக்கு 120 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை நட்டஈடாக வழங்க உள்ளது.
நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இவ்வாறு நட்டஈட்டுத்தொகை வழங்கப்பட உள்ளது.
ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட விமான சேவைகளுக்கான விமான டிக்கட்டுகளை விற்பனை செய்ததாக குவான்டாஸ் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
கடந்த 2021ம் மற்றும் 2022ம் ஆண்டுகளில் இவ்வாறு விமானப் பயணிகளுக்கு விளம்பரம் செய்து டிக்கட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அபராதமாகவும் நட்டஈடாகவும் இவ்வாறு 120 மில்லியன் டொலர் செலுத்தப்பட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
10 வீதத்திற்கும் குறைந்தளவு ஆசன எண்ணிக்கைகள் பதிவான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
86000 விமானப் பயணிகளுக்கு குவான்டாஸ் விமான சேவை நிறுவனம் நட்டஈடு வழங்க உள்ளது.
வர்த்தக பயணங்கள், விடுமுறைப் பயணங்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக பதிவு செய்த வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களை ஏமாற்றும் வகையிலான விளம்பரங்கள் செய்யக் கூடாது என அவுஸ்திரேலிய வாடிக்கையாளர் மற்றும் போட்டி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.