பலஸ்தீன மாணவர்களுக்கு ஆதரவாக சுவிட்சர்லாந்தில் மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
சுவிட்சர்லாந்தின் லுசார்ன் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
காசா பிராந்தியத்தில் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இஸ்ரேலிய நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை முதல் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் தங்கியிருந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
போர் நிறுத்தம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் பலஸ்தீன கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இஸ்ரேலின் இனவழிப்பு நடவடிக்கைகளை வேடிக்கை பார்க்க முடியாது என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகின் ஏனைய பல நாடுகளிலும் பலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.