இலங்கையில் ஒன் எரைவல் வீசா வழங்கும் வெளிநாட்டு நிறுவனம், அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்துள்ளது.
VFS Global என்ற நிறுவனம் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் முறைப்பாடு செய்துள்ளது.
உலக அளவில் நன்மதிப்பினை வென்ற தமது நிறுவனத்திற்கு பண்டாரநாயக்க விமான நிலையத்தில் இடையூறுகள் ஏறப்டுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் ஒன் அரைவல் வீசா வழங்கும் பணியை சிங்கப்பூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் VFS Global என்ற நிறுவனத்திடமும் VFS Global என்ற அமெரிக்க நிறுவனத்திடமும் ஒப்படைத்திருந்தது.
பண்டாரநாயக்க விமான நிலையத்தில் இணைய சேவை செயலிழந்ததாகவும் இது ஓர் சதித் திட்டமாக இருக்கலாம் என வெளிநாட்டு நிறுவனப் பணியாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சில மணித்தியாலங்களுக்கு இணைய சேவை செயற்படவில்லை எனவும் இது ஓர் ஒத்துழையாமை சதியாக இருக்கக் கூடும் எனவும் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
தங்களது நன்மதிப்பிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக நிறுவனம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
இந்த நிறுவனங்கள் பயணிகளிடமிருந்து கூடுதல் தொகை வீசா கட்டணம் அறவீடு செய்வதாக அண்மையில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.