உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் செலென்ஸ்கீயை படுகொலை செய்ய மேற்கொண்ட சதி முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனிய பாதுகாப்புப் படையினர் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
ரஸ்யா, உக்ரைன் ஜனாதிபதியை படுகொலை செய்ய முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரஸ்யாவின் மத்திய பாதுகாப்புப் பிரிவினைச் சேர்ந்த சிலர் இவ்வாறு சதி முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
செலென்ஸ்கீ மட்டுமன்றி உக்ரைனின் சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளையும் படுகொலை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சதி முயற்சிக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு உக்ரைனிய இராணுவ கேணல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினைச் சேர்ந்த ஒருவரைக் கொண்டே செலென்ஸ்கீயை படுகொலை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.