சுவிட்சர்லாந்தில் சைபர் மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
2023ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு பகுதியில் சைபர் குற்றச் செயல்கள் இவ்வாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தின் மத்திய சைபர் பாதுகாப்பு அலுவலகம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
30331 சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2022ம் ஆண்டு இரண்டாம் காலாண்டு பகுதியில் 16951 முறைப்பாடுகள் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி சைபர் மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொழில் வாய்ப்பு குறித்த மோசடிகள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.