சுவிட்சர்லாந்தில் உற்பத்தி செய்யப்படும் ரோபோக்கள் விண்வெளி ஆய்வுகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து ஆய்வாளர்கள் இது தொடர்பிலான பரிந்துரையை முன்வைத்துள்ளனர்.
எதிர்காலத்தில் சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் விண்கலங்களில் இந்த ரோபோக்களை பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளனர்.
பாரிய ரோவர் ரோபோக்களை விடவும் சிறிய ரோபோக்கள் பொருத்தமானவை என சுவிஸ் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நான்கு கால்களைக் கொண்ட ரோபோ ஒன்றை சுவிஸ் ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
அண்மைக் காலமாக உலகின் பல்வேறு நாடுகள் விண்வெளி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பூமியைத் தவிர்ந்த வேறும் கிரகங்களின் நீர், நிலவமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆய்வு முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நடக்கும் ரோபோக்களை உருவாக்கிய சுவிஸ் ஆய்வாளர்கள் எதிர்காலத்தில் பறக்கக்கூடிய ரோபோக்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர்.