இலங்கையின் விமான சேவை நிறுவனமான ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் விமானிகள் உள்ளிட்ட பணியாளர்கள் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு விமான சேவை நிறுனமான எயார் பெல்ஜியம் விமான சேவையின் பணியாளர்கள் இவ்வாறு துன்புறுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கன் பணியாளர்கள் இந்த விடயம் தொடர்பில் விமான சேவை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இனக்குரோத அடிப்படையில் தாம் துன்புறுத்தல்களை அனுபவிக்க நேரிட்டுள்ளதாகவும் உருவக் கேலி செய்யப்படுவதாகவும் ஶ்ரீலங்கன் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஶ்ரீலங்கன் விமானிகள் இரண்டாம் தர அடிப்படையில் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் அண்மைய நாட்களாக பெரும் நட்டத்தை எதிர்நோக்கி வரும் நிலையில், சேவையை முன்னெடுக்கும் நோக்கில் எயார் பெல்ஜியம் சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்களை குத்தகைக்கு அமர்த்தியுள்ளது.
இவ்வாறு குத்தகைக்கு அமர்த்திய போது எயார் பெல்ஜியம் விமானப் பணியாளர்கள் சிலரையும் கடமையில் ஈடுபடுத்துமாறு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு எயார் பெல்ஜியம் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் பணியாற்றும் ஶ்ரீலங்கன் விமானப் பணியாளர்களும், இலங்கை பயணிகளும் மோசமாக நடத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.