5.6 C
Switzerland
Friday, October 4, 2024

இரட்டைக் குடியுரிமை கொண்ட டயனா பதவி இழந்தார்

Must Read

பிரித்தானிய மற்றும் இலங்கை இரட்டைக் குடியுரிமை கொண்ட ராஜாங்க அமைச்சர் டயனா கமகே நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்தார்.

டயனா கமகே இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு தகுதியற்றவர் என உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பிரித்தானிய குடியுரிமையை கொண்டவர் எனவும், இதனால் அவர் இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதற்கு தகுதியற்றவர் எனவும் உத்தரவிடக்கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஏற்கனவே இந்த மனுவை சவாலுக்கு உட்படுத்தி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES