சர்ச்சைக்குரிய நினைவுச் சின்னங்களை அகற்றப் போவதில்லை என சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரம் தெரிவித்துள்ளது.
இனவாத, காலணித்துவ மற்றும் அடிமைத்துவ அடிப்படையில் செயற்பட்டவர்கள் என குற்றம் சுமத்தப்பட்ட எவரது சிலைகளையும் நினைவுச் சின்னங்களும் அகற்றப்படாது என தெரிவித்துள்ளது.
தகவல்களை திரட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளதாகவும், வெறுமனே சிலைகள் அகற்றப்படாது எனவும் தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய சிலைகள் அகற்றப்படாது எனவும் சர்ச்சைக்குரிய இடங்களின் பெயர்கள் மாற்றப்படாது எனவும் ஜெனீவாவின் நகர முதல்வர் அல்போன்சோ கோமஸ் தெரிவித்துள்ளார்.
இனவாத அடிப்படையிலான 33 சிலைகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் ஜெனீவாவில் பொது இடங்களில் காணப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.