சுவிட்சர்லாந்தில் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவான போராட்டம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
லாவுசன், ஜெனீவா மற்றும் சூரிச் ஆகிய பல்கலைக்கழக கட்டடங்களில் பலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டம் தற்பொழுது மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
பலஸ்தீன மக்களுக்கு ஆதரவினை வெளியிடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலஸ்தீனத்தை விடுதலை செய் எனவும் இனவழிப்பினை நிறுத்து எனவும் மாணவர்கள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.