உலகில் ஞாபக மறதி நோய் காரணமாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வருடாந்தம் உயிரிழக்கின்றனர்.
இந்த நிலையில் ஞாபக மறதி நோயிற்கு ஒலிவ் எண்ணெய் சிறந்த ஒர் மருந்து என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாள் தோறும் ஒரு கரண்டி ஒலிவ் எண்ணெய் எடுத்துக் கொள்வதன் மூலம் ஞாபக மறதி நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவில் இது தொடர்பில் ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 28 ஆண்டுகளாக 90000 பேரிடம் இது குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
ஆய்வில் பங்குபற்றியவர்களில் 65 வீதமானவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாள் ஒன்றுக்கு ஏழு கிராம் எடையுடைய ஒலிவ் எண்ணெய் உட்கொள்பவர்களுக்கு ஞாபக மறதியினால் ஏற்படக்கூடிய மரணம் 28 வீதத்தினால் குறைவடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒலிவ் எண்ணெய் மூளைக்கான இரத்த ஓட்டத்தை அதிகரிக்கக் கூடியது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.