ரஸ்யாவிற்கு சட்டவிரோதமான முறையில் படையினரை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓய்வு பெற்ற இரண்டு இராணுவ உயர் அதிகாரிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருணாகல் பிரதேசத்தில் வைத்து இந்த இரண்டு பேரும் கைதாகியுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் இலங்கை படையினர் ரஸ்ய கூலிப் படையில் இணைந்து கொண்டு போரில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இவ்வாறு ரஸ்ய போரில் இணைந்து கொண்டவர்களை அனுப்பி வைத்த குற்றச்சாட்டில் இந்த இரண்டு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெருந்தொகை சம்பளம் வழங்கப்படும் எனக் கூறி இவ்வாறு இலங்கைப் படையினர் ரஸ்ய கூலிப் படைகளில் இணைத்துக்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.