வீசா வழங்கும் நடைமுறையில் மாற்றங்களைச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஏற்கனவே ஒன்அரைவல் அல்லது வருகை வீசாக்களை வழங்கும் பணிகளை இந்தியாவின் VFS நிறுவனம் மேற்கொண்டு வந்தது.
அண்மையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து வீசா வழங்கும் நடவடிக்கையிலிருந்து குறித்த நிறுவனம் தற்காலிகமாக விலகிக் கொண்டுள்ளது.
வருகை வீசா வழங்கும் நடைமுறையில் அடிப்படை மாற்றங்களை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த மாற்றங்கள் குறித்த யோசனைகள் விரைவில் அமைச்சரவைியல் சமர்ப்பிக்கப்ட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வீசா வழங்கும் நடவடிக்கைககள் முழுவதுமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வீ.எப்.எஸ் நிறுவனம் ஆவணங்களை பரிசீலனை செய்யும் பணிகளை மேற்கொள்வதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் எச்.ஜே. இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.