இலங்கையில் ஒன் அரைவல் வீசா வழங்குவதில் காணப்படும் ஆபத்து குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரபல சுற்றுலா யூடியூபாளர் வில் டேவிஸ் அல்லது டெரெக் டெரென்டி என்பவர் இந்த ஆபத்து குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை வீசா வழங்கும் நடைமுறையில் காணப்படும் ஆபத்துக்கள் குறித்து அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சுற்றுலா வீசாக்கள் தொடர்பில் நாள் தோறும் மின்னஞ்சல்கள் அனுப்பி வைக்கப்படுவதாகவும் சில தனிப்பட்ட தரவுகள் கோரப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
முழுப்பெயர், முகவரி, கடவுச்சீட்டு விபரங்கள் உள்ளிட்ட சில முக்கியமான விபரங்கள் கோரப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
வீசா அனுமதிக்கப்பட்டு நீண்ட காலம் சென்றதன் பின்னரும் வீ.எப்.எஸ் க்ளோபல் நிறுவனம் வேறும் விண்ணப்பதரிகளின் தகவல்களை தமக்கு தொடர்ச்சியாக அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வீசா வழங்கும் நடைமுறையில் பாரியளவு தனிப்பட்ட தகவல் கசிவு இடம்பெறுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
வேறும் சுற்றுலாப் பயணிகளின் தனிப்பட்ட விபரங்கள் அடங்கிய மின்னஞ்சல்கள் கிடைக்கப் பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.