இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான எயார் இந்தியா நிறுவனம் நீண்ட இடைவெளியின் பின்னர் லாபமீட்டத் தொடங்கியுள்ளது.
தசாப்த காலமாக எயார் இந்தியா நிறுவனம் தொடர் நட்டத்தை எதிர்நோக்கி வந்த நிலையில், லாபமீட்டத் தொடங்கியுள்ளது.
1970களில் சிங்கப்பூரின் ஸ்தாபகத் தலைவர் லீ குவான் எயார் இந்தியா விமான சேவை நிறுவனத்தை அடிப்படையாகக் கொண்டு சிங்கப்பூர் விமான சேவையை ஆரம்பித்தார்.
எனினும் எயார் இந்தியா நிறுவனம் அண்மைய சில தசாப்தங்களாகவே பல மில்லியன் டொலர் நட்டத்தை பதிவு செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
எயார் இந்தியா சேவையின் நன்மதிப்பு சீர்குலைந்ததுடன் மிகவும் தரம் குறைந்த சேவைகளே வழங்கப்பட்டு வந்தன.
இவ்வாறான ஓர் பின்னணியில் கடந்த 2021ம் ஆண்டு டாடா குழுமம், அரசாங்கத்திற்கு சொத்மான எயார் இந்தியா நிறுவனத்தை கொள்வனவு செய்தது.
அதன் பின்னர் உலகத் தரம் வாய்ந்த விமான சேவை நிறுவனமாக எயார் இந்தியாவை உருமாற்ற வேண்டுமென டாடா குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நடராஜன் சந்திரசேகரன் இலக்கு ஒன்றிணை நிர்ணயித்தார்.
இந்த இலக்கினை அடையும் பொறுப்பு எயார் இந்தியா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கெம்பல் வில்சனிடம் ஒப்படைக்கப்பட்டது.
சில தசாப்தங்களாகவே எயார் இந்தியா நிறுவனத்தின் தரம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து சென்றதாக வில்சன் தெரிவிக்கின்றார்.
பழமைய பெருமை மிகு சேவையை மீண்டும் வழங்கும் நிலைக்கு எயார் இந்தியா விமான சேவை நிறுவனத்தின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வில்சன் தெரிவிக்கின்றார்.
இது தொடர்பிலான ஐந்தாண்டு திட்டமொன்று கடந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.
டாடா நிறுவனம் எயார் இந்தியாவின் சேவைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் பல பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது.
விமானங்கள், விமானங்களின் உள் அமைப்பு மேம்பாடு, வாடிக்கையாளர் சேவை என பல்வேறு வழிகளிலும் மேம்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
470 புதிய விமானங்களை கொள்வனவு செய்யும் திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் மத்தியில் எயார் இந்தியா விமான சேவை நிறுவனம் தொடர்பில் நிலவும் மோசமான அபிப்பிராயத்தை மாற்றியமைப்பதில் அதிக கரிசனை கொண்டு செயற்பட்டு வருவதாக டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.